பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் - - 56

பயன்கள் சர்வாங்காசனத்தில் பெற்ற வேதனைக்கு மாற்று மருந்தாக இந்த ஆசனம் உதவுகிறது. நுரையீரல்கள் விரிந்து கொடுப்பதால் அதிக சுவாசம் பெறத் தூண்டுகிறது.

கழுத்தினை, தோள் பகுதிகளை மற்றும் தசைகளை இதமாகப் பிடித்துவிடுகிறது. தைராய்டு போன்ற சுரப்பிகள் அதிக இரத்த ஓட்டம் பெற வழிவகை செய்கிறது.

இடுப்புப் பகுதி. முதுகுப்பகுதி, கழுத்துப்பகுதிகள் நன்கு வலிமை பெற்றுத் திகழ்கின்றன.

எண்டோகிரைன் சுரப்பிகள், பிட்யூட்டரி சுரப்பிகள் வலிமை பெற உதவுகிறது. வயிற்றுத் தசைகள் வளம்பெறுவதால் மலச்சிக்கல் தீர்கிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது.

8. ஹலாசனம்

பெயர் விளக்கம்: ஹலா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் கலப்பை என்பது பொருளாகும். ஆசனம் செய்யும் ஒருவரை பார்க்கும் போது கலப்பை ஒன்று இருப்பது போல தோன்றும் அமைப்பினால் தான் இதற்கு ஹலாசனம் என்ற பெயர் வந்திருக்கிறது.

ஆங்கில உடற்பயிற்சி முறையில், இதனை பின்புறமாக @@LaoLă ăpsos)]ub Luoljá (Trunk Rolling up Backward) என்று கூறி. நடைமுறையில் பயன்படுத்துகின்றார்கள். என்றாலும், யோகாசனத்தின் மூலமே தான் இதில் நிறைய பயனைப் பெற முடியும். -

செயல் முறை: விரிப்பின் மீது முதலில் மல்லாந்து

படுக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில்.