பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சுவாசமும் சுகானுபவமும்.

ஆழ்ந்து சுவாசத்தை உள்ளிழுப்பதில் உள்ள ஆனந்தத்தை, அதை அனுபவித்துச் செய்பவர்களே உணர முடியும் பெறற்கரிய பேரின்பமும் பெற முடியும். அதனை உடற்பயிற்சி செய்வதின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும்.

சாதாரணமாக மூச்சை உள்ள இழுப்பதும், வெளியே விடுவதும் இயற்கையாக எப்பொழுதும் நடக்கக் கூடிய காரியமே. ஆனால் சரியாக முறையாக, ஆழ்ந்து சுவாசத்தை உள்ளே இழுக்கும்பொழுது அதனால் எத்தனை எத்தனை பயன்கள் உண்டாகின்றன தெரியுமா?

நிறைய காற்றினை நுரையீரலுக்கு உள்ளிழுத்து அனுப்பும் போது, நிறைய காற்றினை (oxygen) நுரையீரல் ஏற்றுக் கொள்கிறது. உயிர்க்காற்றினை இரத்தம் எடுத்துக் கொள்கிறது. இரத்த ஓட்டம் அதனால் விரைவு பெறுகிறது. இதனால் உடம்பில் உள்ள எல்லா செல்களுக்கும் இரத்தம் விரைந்து செல்கிறது. பயனளிக்கிறது.

செல்கள் செழிப்படைகின்றன. அதனால் உறுப்புகள் வளரவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

சாதாரணமாக சுவாசிப்பதால் என்ன குறைந்துபோய் விடுகிறது? உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமோ என்று கோபமாகப் பேசுபவர்களும் உண்டு. --

சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது தேவையான உயிர்க் காற்று நுரையீரல் முழுவதுதற்கும் போவதில்லை. அதனால் நுரையீரல்களின் அடிப்பாகமானது. அதிக இயக்கம் பெறாது