பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் , 64 போகின்றன. பயன்படாத உறுப்புக்கள் பலம் இழப்பது இயற்கை தானே.

அப்படி உழைப்பில்லாத நுரையீரல் பகுதிகள் உழைக்கும் ஆற்றலை இழந்து போகின்ற்ன. உண்மையான வலிமையையும் இழந்து போகின்றன. நுரையீரலின் அடிப்பகுதியானது செயலினை மறக்கிறது. என்றால் அதனைத் தொடர்ந்துள்ள ஜீரணமண்டலம் மற்றும் நுண்ணியக்க உறுப்புக்கள் அனைத்தும் இயல்பான ஆற்றல் மிகுந்த பணிகளை ஆற்ற முடியாமல் வலிமையிழந்து

போகின்றன.

நல்ல உடல்திறன் வேண்டும் என்பவர்கள். ஆழ்ந்து அடிவயிற்றை அழுத்தி விடுவதன் மூலம் நன்கு மூச்சை இழுத்து சுவாசிக்க வேண்டும் என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு பின் பற்ற வேண்டும். அதாவது இயல்பான இசைவான முறையில் ஆழ்ந்த (Deep) சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடும் பழக்கத்தை மேற் கொண்டு முறையாகச் செய்து வந்தால், நீங்கள் எதிர்பார்க்கின்ற உரிய பயனே கிடைக்கும். எதிர்பார்க்கின்ற வளர்ச்சியையும் அளிக்கும்.

ஏன் சுவாசித்தலை அதிகமாக வற்புறுத்துகிறோம் என்பதை வாசகர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆழ்ந்த சுவாசம் அதிகமான உயிர்க்காற்றை உள்ளிழுத்துத் தருகிறது. அதிக உயிர்க்காற்று இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி துரிதப்படுத்தி விடுகிறது. தூய்மையான இரத்தம் நல்ல தரமான தசைப் பகுதிகளை உண்டாக்கி உருவாக்கித் தருகிறது. -

வலிமையான தசைகளும் வலுவான எலும்புகளும் உருவாக்கும் வகையில், உடல் உறுப்புக்களும் நல்ல விதமாக வளர்ச்சி அமைகின்றன. உயரம் பெறுகின்றன.