பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

மற்றவர்கள் எதிர்மாறாகப் பேசுவார்கள். பேசும்பொழுது வாங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் போனதும், அவர்கள் போன திசைப் பக்கமே வீசியெறிந்து விடுங்கள். ஏனென்றால் நல்லது செய்யத் தொடங்கும் பொழுதுதான் நாலாபுறங்களிலிருந்தும் சோதனைகளும் வேதனைகளும் வந்து தாக்கும். செயல்பட முடியாதவாறு சிந்தையைக் குழப்பும். திசை திருப்பும்.

உங்களுக்கு உயரமாக வளரவேண்டும் என்ற நோக்கம் எழுந்த பிறகு, அதற்கான காரியங்களைத் தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் அறிவுரையை எதிர் பார்க்கவே வேண்டாம்.

இனி நீங்கள் தொடங்கலாம்.

இந் நுாலை அச் சிட்டுத் தந்திருக்கின்ற கிரேஸ் பிரிண்டர்சார்க்கும், அருமையாக உதவிய R.ஆதாம் சாக்ரட்டீஸ் மற்றும் அனைவருக்கும் என் நன்றி.

தொடர்ந்து என் நுால்களை வாங்கி ஆதரித்து வரும் அனைவருக்கும் என் அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

ஞானமலர் இல்லம் }

சென்னை 17.