பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 72

கால்களை நன்கு அகலமாக விரித்து நின்று. கைகளைப் பக்கவாட்டில் விரித்து வைத்துக் கொள்ளவும்.

நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு முன்புறமாகக் குனிந்து வலது கையால்இடது காலைத் தொட வேண்டும். பிறகு நிமிர்ந்து நின்று விட்டு, மீண்டும் கீழே குனிந்து இடது கையால் வலது காலைத் தொட்டு விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கவும்.

இப்பொழுது தான் மூச்சை வெளியே விட வேண்டும்.

ஒரு கை ஒரு காலைத் தொடும் பொழுது, மறு கை அதற்கு நேர்கோண அளவில் நிறுத்தி வைக்கவேண்டும். படம், பார்க்க).

இதில் மூச்சின்ை எiளடக்கிச் செய்வது மிகமிக முக்கியம் என்பதால். நன்கு உணர்ந்துசெய்யவும். ஆரம்ப்த்தில் 10 எண்ணிக்கையில் தொடங்கி, பிறகு அதிகப்படுத்திக் கொள்ளவும்.

7 மல்லாந்து படுத்துக் கொண்டு. கால்களைஅகலப் பரப்பி

வைத்திருக்க வேண்டும். கைகளையும் பக்கவாட்டில் நீட்டியிருக்க வேண்டும்.