பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உங்கள் கவனத்திற்கு

உயரமாக வளர வேண்டும் என்னும் உளம் ததும்பிய அவாவினால், பயிற்சிகள் செய்யமுன் வந்திருக்கின்றீர்கள். பயிற்சிகள் தான் உறுப்புக்களை பக்குவப்படுத்தி, பதப்படுத்தி, உற்சாகமாக வளர ஊக்குவிக்கின்றன என்ற உண்மை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெறும் பயிற்சி மட்டுமே வீறுபெற்ற வளர்ச்சியைத் தந்துவிடும் என்று எதிர்பார்த்து விடக் கூடாது. உடலின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக விளங்குவது உணவு என்றால், அது மிகையல்ல.

ஆகையால், என்ன உணவு சாப்பிடலாம் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. சுவையான உணவா அல்லது சக்திகள் நிறைந்த சரிசம விகித உணவா என்று நீங்கள் கேட்கலாம்.

சுவையான உணவு என்றால் விலை அதிகமானதாக இருக்கலாம். சரிசம அளவு விகிதம் உள்ள உணவு என்றால், ஆராய்ந்து பார்த்து தேர்ந்தெடுத்து உண்ண முடியாத சூழ் நிலையும்

அமையலாம்.

அதனால் உணவு எப்படி அமைய வேண்டும் என்று கேட்கும் உங்களுக்கு ஒரே வரியில் பதில் சொல்லியாக வேண்டும் இருந்தால், கிடைத்ததை உண்ணுங்கள் என்பது தான்.

கிடைத்ததை உண்ணலாம். ஆனால் அதை விரும்பி உண்ண வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடக்கூடாது.

பசித்துப் புசி என்பார்கள். புசிப்பதை ருசித்து ரசித்துச் செய்ய வேண்டும். அப்படி விரும்பி சாப்பிடும் எந்த உணவையும்