பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 76

உடல் உவப்புடனே ஏற்றுக் கொள்கிறது. அவ்வாறு ஏற்றுக்கொண்ட உணவில் இருக்கும் அத்தனை சக்தியையும் இரத்தமாக அல்லவா மாற்றிக் கொள்கிறது

கிடைக்கும் உணவுக்கு மேல், பால், பழங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். கீரைவகைகள் உடலுக்கு நல்லது. ஆப்பிள். ஆரஞ்சு, திராட்சை தக்காளி இவற்றை மிகுதியாக சாப்பிடலாம். வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லதே.

கால்சியச் சத்து எலும்பின் உறுதிக்கும் வலிவுக்கும் நிறைய தேவை. காலை மாலை வெயில் நேரத்தில் விளையாடுகிற போது அல்லது வேலையில் ஈடுபடுகிற போது D விட்டமின், நிறைய கிடைக்கிறது. D விட்டமின் நிறைய பெற நீங்கள் முயற்சிக்க வேண்டும். எலும்புகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்ற கீரவகைகள் காய்கறிகள், வெங்காயம். கிழங்கு வகைகள், பேரீச்சம் பழம் முதலியவற்றையும் உணவு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

பால் உடலுக்குச் சிறந்த ஆகாரமாகும்.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம் என்ற எனது நூலில் உணவு வகைகள் குறித்து எழுதியிருக்கிறேன். அதனைப் படித்துப் பின்பற்றிப் பயனடையுங்கள்.

நல்ல உணவு உட்கொள்ளுவது தான் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று எண்ணும் பொழுது, உடலுக்கு நலிவு தருகின்ற தீய பழக்கங்களையும் அடியோடு வெறுத்து ஒதுக்குவது முக்கியமாக கடமையாகும். தெரிந்தே தீய பழக்கங்களைத் தொடர்வது, உடல் வளர்ச்சியைப் பாதிக்கும், உணர்ச்சியையும் மலர்ச்சியையும் பாதிக்கும்.