பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

ஆகவே, புகைத்தல், குடித்தல். பெருந்தீனி உண்ணல், உடலுறவில் அதிகம் ஈடுபடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், இயற்கை நியதிகளை மறந்து இஷ்டம் போல் நடந்து கொள்ளல் போன்றவை எல்லாம் நலிவு படுத்துவனவாகும்.

தீய பழக்கம் என்பது தீ போல இருந்து மனம் உடலையெல்லாம் அழித்து விடுகின்ற ஆற்றல் மிகுந்த பழக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கெட்டப்பழக்கம் என்றும் இதனைக் கூறுவார்கள். உடல் வளர்ச்சியை உடல் மலர்ச்சியை எந்தெந்த பழக்கங்கள் கெடுக்கின்றனவோ, அவை தான் கெட்டப் பழக்கங்கள்.

= புகைப்பழக்கம் சுவாச உறுப்புகளை கெடுக்கின்றன. குடிப்பழக்கம் குடற்பகுதிகளை வீணாக்கிவிடுகின்றன. நரம்பு மண்டலத்தைத் தாக்கி நாசமாக்கி விடுகின்றன.

அதிக நேரம் கண்விழிப்பு, உடலின் ஆற்றலையே அழித்து விடுகின்றன.

அதிகமான அளவு உணவு உண்பது கூட கெட்ட பழக்கம்தான்.

ஆகவே, எதிலும் நிதானமான ஓர் அளவு உண்டு எதிலும்

சீரான தன்மை கொள்வது சிறப்பாகும். உடலுறுப்புக்களை உறுத்தாதஅளவுக்கு பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.

உடலாலும் மனதாலும் சிறப்பாக வாழ்வதுதான் ஒரு மனிதரது கடமை என்பதை நாம் நினைவில் இருத்திக் கொண்டால், நாம்வளருவோம். உயருவோம். அதுதான் நாம் கொண்ட நல்ல இலட்சியம்.