பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


உண்மையான காரணமே தவிர, நம்மால் முடியாது என்பதல்ல: நமக்கு சக்தியே இல்லை என்பதும் பொரு ளல்ல.


“மனித சக்தி மகத்தான சக்தி”, இப்புனிதமான சக்தியைப் போற்றிப் புகழ்ந்து, பாராட்டி பயன்படுத் தினால், பாரிலே பல சாதனைகளை செய்துகாட்ட முடியும். முடியவே முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்ட காரியங்களில் கூட, மீண்டும் பல சாதனை களை செய்து காட்டியவர்களும் மனிதர்களே.


உலகிலே மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கின்ற நாடு, 70 கோடிக்கு மேல் மக்கள் தொகையைப் பெற்றிருக்கும் நாடு. பரந்து விரிந்த நாடு, பார் புகழும் சிறந்த நாடு நம் பாரத நாடு.


அறத்திலும் தரத்திலும், அன்பிலும், பண்பிலும், வீரத்திலும், தியாகத்திலும் தனிப்புகழ் கொண்ட நம் நாடு, இன்று மக்களைப் பெருக்கும் நாடாகவா மாறிவிட்டது? மனித சக்தியை வளர்க்க முடியாமலா போய்விட்டது? மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத மந்த நிலையிலா மாறிவிட்டது?.


கேள்வியை நாமே கேட்டுக் கொள்வோம்! நூற்றுக்கு ஒருவர், ஆயிரத்துக்கு ஒருவர் வல்லவராக இருப்பார், கொடைவள்ளலாக இருப்பார் என்று காவியத்தில் படிக்கிறோம், களிப்படைகிறோம். ஆனால் கோடியில் ஒருவர் கூட இல்லையே நம்நாட்டில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி வீரராக வர!


70 கோடி மக்களுக்கு 70 வீரர்களாவது வேண் டாமா?70 பேர் கூட வேண்டாம்! தங்கப் பதக்கம் பெறத்