பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 99


பலமுறை பலகை மேல் படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.


பலகைக்கு முன்னதாகவே காலடி (Step) விழுந்தால், முன்னர் ஒடத் தொடங்கிய இடத்திலிருந்து, காலடிக்கும் பலகைக்கும் இடைப்பட்டத் தூரத்தை அளந்து அந்த அளவினை சரியாகக் குறித்துக் கொண்டு, மீண்டும் ஒடி வரவேண்டும்.


பலகைக்குப் பின்னால் (தாண்டும் மணலுக்கு அருகே) காலடி வந்தால், அந்த அளவுக்கு, குறியை இன்னும் பின்னால் தள்ளி வைக்க வேண்டும்.


நீங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். ஒடி வருகின்ற் காலடி எல்லாம் ஒரே சீராக, ஒரே மாதிரியாக (Equal Step) இருப்பது அவசியம். ஆனால் பலகையில் மிதிக்கும் காலடிமட்டும், மற்ற எல்லா காலடியை விட அரை அடி குட்டையாகவே இருக்க வேண்டும். அப்பொழுதுதான், உதைத்து மேலே எழ வசதியாக இருக்கும்.


உதைத் தெழும்பும் பலகையின் அருகே (Take of Board) ஒடி வரும் பொழுது உங்கள் பார்வை, நீங்கள் தாண்ட வேண்டிய மணல் பகுதியை நோக்கிச் சென்று விடவேண்டும்.கண்ணும் கருத்தும், குறிக்கோளும்,நீங்கள் தாண்ட வேண்டியது.ாரத்தைக் கண்டறிவதுபோல, அந்த துரத்தையே பார்க்க வேண்டும். நீங்கள் பலகையையே பார்த்துக் கொண்டு ஓடி வந்தால், காலடியை சரி செய் வதற்காகவே காலடியைக் குறைக்கவோ, கூட்டவோ முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.அதனால் தடுமாறவும், தவறு செய்யவும் (Foul) நேரிடும்.