பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 101


மிதித்து மேலே பறக்கத் தொடங்கிய உடனே தலைநிமிர்ந்து விடவேண்டும். (இடது காலில் தாண்டு வோராக இருந்தால் இந்த முறை. வலதுகால் என்றால் மாற்றிக் கொள்க) இடது கால் பலகையை மிதித்து மேலே கிளம்பிய உடன் மறுகால் 90 கோணத்தில் மடிந்து நிற்க, இடதுகை முன்புறம் வந்து, உடல் சமநிலையை உண் டாக்கும். இப்படி உதைத்துக் கிளம்பும்போது கைகளும், கால்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.


3. காற்றில் நடத்தல் (Walking in the air). மடிந்திருந்த வலது கால் முன்னுக்கு வர, இடது கை சமநிலைக்காக முன்பக்கம் நீள, தலை நிமிர்ந்தவாறு, தாண்டவேண்டிய பகுதியை பார்வையிட, மார்பு அகலமாக விரிந்திருக்க, உதைத்து எழும்பிய இடது காலை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வருவதற்காக வளைக்க, இப்பொழுது இரண்டு கைகளும் உடல் சமநிலைக்காக மாறி மாறி இயங்கும்.