பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


குறிப்பு: ஒடத் தொடங்கும் இடது காலை 1 என எண்ணவும்.


அதுபோலவே 20 தப்படிமுறையில், இடது காலில் தொடங்கி, 20வது தப்படி வலது காலில் முடிகிறது.21வது தப்படி இடது காலுக்கு வரும் பொழுது தாண்டத் தொடங்கவும்.


குறிப்பு: உதைத்தெழும் இடது கால் (L. Jumping Leg) gol–3, Glost fillb Qu of 576i (SL. Starting Leg) L= இடது கால் R = வலது கால்


பயிற்சிகள்


தாண்டிக் குதிக்கும் போது, அதிக உயரமாகத் தாண்டிப் பழகுதல் நல்லது. குறைந்தது 4%யிலிருந்து 5 அடி உயரமாவது தாண்டினால் தான், அதிக தூரத்தைத் தாண்ட இயலும். அதற்காக, தாண்டுகின்ற மணற் பகுதியில், 3 அடி உயரம் கயிற்றையோ அல்லது நீண்ட குச்சியையோ இருவரை பிடித்துக் கொள்ளச் செய்து தாண்டிப் பழகினால், போட்டி நேரத்தில் இயல்பாகவே அந்த பழக்கம் வந்து விடும்.


காற்றில் நடப்பதற்கான வலு, அடிவயிற்றுப் பகுதி கடினமாக இருந்தால்தான் இயலும், கால்களைத்துக்கிக் காற்றில் நடக்கும் சக்தி அப்பொழுதுதான் கிடைக்கும் அடிவயிற்றுக்கான எடைப் பயிற்சிகளை (Abdomen) முறையாகச் செய்யவும்.


மொத்தம் 6 முறை தாண்டுகின்ற வாய்ப்புக் கிடைக்கும். முதல் மூன்று தாவல்களில் தேர்வும், மற்ற மூன்று முறைகளில் இறுதி வாய்ப்பும் கிடைக்கும். இந்த 6 வாய்ப்புக்களிலும் சிறந்த சாதனையை ஏற்படுத்தக் கூடிய அளவு பழகிக் கொள்ள வேண்டும்.