பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 [...] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


2. மும்முறைத் தாண்டல் (Hop-step and Jump)


மும்முறைத் தாண்டல் என்றால் என்ன? இதில் பங்கு பெறுவோருக்கு என்னென்ன தகுதிகள் தேவை?


ஒடி வந்து ஒரு முறை தாவி (Hop), தாவும் காலா லேயே நின்று, பிறகு மறு காலால் ஒரு காலடி (Step) வைத்து, பின் காலடி வைத்த காலாலே எழும்பி இரு காலையும் சேர்த்து மணற் பகுதியில் குதிப்பதற்கு (lump) மும்முறைத் தாண்டல் என்று பெயர்.


இது 19ம் நூற்றாண்டில் அயர்லாந்தில் பிரபலமாக இருந்த போட்டியாகும். இந்தப் போட்டியில் நின்று கொண்டே தாண்டும் போட்டிகூட இருந்தது. ஒலிம்பிக் போட்டியில், பிறகு அது தேவையில்லை என்று தள்ளி விட்டார்கள். ஒடிவந்து தாண்டுகின்ற நிகழ்ச்சி மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.


இப்போட்டியில் பங்கு பெறவும், பழகத்துடிப்பவர் களும், உயரமானவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை.குள்ளமானவர்கள் இதற்குத் தேவையில்லாதவர்கள் என்றும் இறுதியாகக் கூறவும் இயலவில்லை.


காரணம், இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் எல்லோரும் குள்ளமானவர்களாகவும் உயரமானவர் களாகவும் இருந்திருக்கிறார்கள். ஊக்கம், உற்சாகம், உழைப்புத் திறன், உறுதியான உடல், வலுவான கால்கள் உள்ளவர்கள் இதில் பங்கு பெறலாம் வெற்றிபெற நிச்சயம் முடியும். .