பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இடது காலால் உதைத்து மேலே எழும்போது (வலது கால் வருபவர்கள் மாற்றிக் கொள்க) வலது கால் 90 கோணத்தில் மடங்கிய பிறகு, முன்னே வந்து நீண்ட பிறகு இடதுகால் முன்னே நீண்டு தரையில் ஊன்றுகிறது, அப்பொழுது தாவல் (Hop) முடிவு பெறுகிறது.


காலடி வைத்தல் (Step): தாவி முடித்துத் தரையில் ஊன்றியிருக்கும் காலுக்கு, மறுகால் காலடி எடுத்து வைக்கத் தயாராக மடங்கியிருந்து பிறகு நிமிர்ந்து, விறைப்பாகித் தாவிக் குதித்துத் (அக்கால் மட்டும்) தரையில்படுகிறது.அப்பொழுது முழுக்காலும் (குதிகாலும் பாதமும்) தரையில் படவேண்டும், சமநிலைக்காக இருகைகளும் பக்கவாட்டில் விரிந்திருக்கவேண்டும்.


‘காலடி எடுத்து வைக்கும்போது, கொஞ்சம் உயரமாகக் குதிக்கலாம். அவ்வாறு செய்தால், அதிக துரத்தைக் கடக்கின்ற ஆற்றலுடன்,நேரமும் கிடைக்கிறது.


ஆகவே, இடது கால் தரையில் பட்டவுடன், மீண்டும் வலது கால் மடிந்து, முன் செல்லத் தயாராகி, எவ்வளவு தூரம் அகலமாக நீள முடியுமோ, அந்த அளவு நீண்டு முன்சென்று, ஊன்றும்போது இடதுகால் 90 கோணத்தில் மடிந்திருக்க, இரண்டு கைகளும் மேல் நோக்கி வேகத்துடன் மேலேற, உடல்காற்றில் மிதந் திருக்கும். உடனே, கைகளை மேலிருந்து முன்னோக்கி இறக்கிடவும். கால்களை மேலிருந்து முன்னோக்கி இறக் கிடவும். கால்களை முன்னுக்குக் கொண்டு வரவும், முன்வரும் கால்களைக் கைகள் தொடமுயல்வது போல குனிந்து கொள்ளுமாறு உடல் வளைய, கால்கள் மணலில் போய் ஊன்றிக்கொள்வதோடு தாண்டுதல் முடிவுபெறு கிறது.