பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [T] 1 13


போட்டியின் போது, நீளத்தாண்டுதலில் கூறியுள்ள முறைகளைப் பின்பற்றி, வளமான வெற்றி பெறுக.


3. உயரத் தாண்டல் (High Jump)


உயரத்தாண்டலைப் பற்றி விளக்கி, அதில் பங்கு பெறுவோருக்குரிய தகுதியையும் கூறுக.


இடைவெளியுடன் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு கம்பங்களுக்கிடையே, உள்ளே குறுக்குக் குச்சி ஒன்றை, ஓடிவரும் ஒருவர், உடல்முழுதையும் துள்ளவிட்டுத் தூக்கித் தன் உடல் முழுவதால், மறுபுறம் கடப்பதுதான் உயரத் தாண்டுதலாகும்.


இவ்வாறு ஓடிவரும்போதே உடலை எப்படி இயக்கினால், எளிதாக உயரத்தைத் தாண்ட முடியும் என்பதில் தான், உடலாண்மைப் போட்டிகளிலேயே மிகவும் புகழ்பெற்றதாகவும் கவர்ச்சியுள்ளதாகவும் இந்நிகழ்ச்சி விளங்குகிறது. பலரும் இந்நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். பரவசப்படுகின்றனர். பாராட்டுகின்றனர்.


பங்குபெற விரும்புகின்றனர்.


தாண்டுவோருக்குரிய தகுதிகளை இனி தொகுத்துக் கூறுவோம்.


துள்ளும் ஆற்றல் வாய்ந்த ஆண், பெண் அனை வருமே இதில் பங்கு பெறலாம். இதற்கு அதிக உயர மானவர்கள் தேவை. உயரமாக இருந்தால் நீண்ட கால்கள் இருக்கும் தாண்டுவதற்கு நீண்ட கால்கள் நல்ல துணை யாயிருக்கும். ஐந்தே முக்கால் அடி உயரம் உள்ளவர்கள் கூட குள்ளமானவர்கள் என்று கூறப்படுகின்றார்கள்.