பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இளைஞர்கள் இயல்பான உயரத்துடன் இருந்தாலே, தாண்டும் பயிற்சியை தொடங்கிவிடலாம்.


குறைந்த துரத்திற்குள்ளேயே அதிக அளவு வேகம் (Speed) பெறுகின்ற ஆற்றல், துள்ளுகின்ற உடற்கட்டு, தன்னம்பிக்கையுள்ள மனம், தன்னால் முடியும் என்ற ஊக்க உணர்வு உள்ளவர்கள் உயரத் தாண்டலில் பங்கு பெறலாம்.


ஊக்க உணர்வு உள்ளவர்களால் உயரத்


தாண்டலில் வெற்றி பெற முடியுமா?


உறுதியாக முடியும். ஊக்கம்தான் உழைப்பின் பிதா


உழைப்பு வந்துவிட்டால் ஒடி வராதா வெற்றி!


இளம்பிள்ளை வாதத்தால் குழந்தைப் பருவத்தில் கால் முடங்கிக் கிடந்த ராய் எவ்ரி என்பவரைபப்பற்றி முன்னே கூறினோம். அவர் நின்றுகொண்டே 5'5” தாண்டிய சூழ்நிலையையும் விளக்கினோம். இங்கு 7 அடி 5% அங்குலம் தாண்டி உலக சாதனை செய்திருக்கும் ரஷ்ய இளைஞர், வீரர் ‘வேலரி புரூமல் என்பவருடைய ஊக்கத்தைப் படியுங்கள்.


‘நீளத் தாண்டலில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும், நிறையப் பரிசுகள் பெறவேண்டும்’ என்று விரும்பிய இளைஞர் புரூமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்த போட்டியாளர்களின் கூட்டத்தைக் கண்டு, அந்த எண்ணத்தையே கைவிட்டு விலகி விட்டார். பிறகு, உயரத்தாண்டலில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்தார். வந்ததும் அவர் தாண்டிய உயரம் என்ன? 4அடி 9 அங்குலமே. பயிற்சி தருபவராலேயே பழிக்கப்பட்டும், விரட்டப்பட்டும்,