பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வெறுக்கப்பட்டும் வெளயேறி வந்த புரூமல், தன் ஊக்கத் தால் உழைப்பால், 15வது வயதில் 5அடி 4 அங்குலத் தையும், 16வது வயதில் 6 அடி 4 அங்குலத்தையும், 18 வயதில் 7 அடியையும் தாண்டி சாதனையை உண்டாக்கி விட்டு 20வது வயதில் 7அடி5% அங்குலம் தாண்டி வெற்றி பெற முடிந்ததே! எதனால்? 6 அடி உயரமுள்ள புருமலால் 75%” எப்படி தாண்ட முடிந்தது, இடைவிடாத பயிற்சி யினால் தானே! விபத்தினால் காலொடிந்த பிறகும்கூட, மீண்டும் தாண்டத் துடிக்கும் அந்த வீரனின் முயற்சிதான் என்னே உழைப்பில் வாரா உறுதிகளும் உளவோ!


ஜான் தாமஸ் என்ற அமெரிக்க வீரர்தான் 7 அடியை முதலில் தாண்டியவர். நம் நாட்டு வீரர் பீம்சிங், 6 அடி 10% அங்குலம் தாண்டி இருக்கிறார். அவர் காட்டுகின்ற ஆர்வமும் ஊக்கமும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது. இப்பொழுது தமிழ்நாட்டு வீரர் அண்ணாவி 212 மீட்டர் உயரம் தாண்டி இந்திய சாதனையை செய்திருக்கிறார். வெல்க அவர் முயற்சி.


உயரத் தாண்டுதலில் உள்ள முறைகள் (Methods) யாவை?


உடல் சமநிலை இழக்காமல், உயரமாக இருக்கின்ற குறுக்குக் குச்சியை முழுதும் கடந்து (அது கீழே விழாமல்) மறுபுறம் தாண்டி விழுகின்ற ஒரு திறமிக்கக் கலைதான் உயரத் தாண்டுதலாகும். இவ்வாறு குறுக்குக் குச்சியைக் கடக்கின்ற முறைகளை அவரவர், அவரவர் வசதிக்கேற்ப பழகினார்கள். அவைகளை விளக்கி, அவைகளிலே எளியமுறை, இனியமுறை எது என்பதையும் கூறுவோம்.


1. கத்தரிக்கோல் தாண்டு முறை: (Scissors Style) கத்தரிக்கோலின் இரு பாகமும் மேலும் கீழும் இயங்கிக்