பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வேண்டும். அதற்கான முயற்சிகளில் இன்றே ஈடுபட வேண்டும். *


‘ஒலிம்பிக் வீரராக வருவது உலக மகா சாதனை. அச் சாதனையை ஆற்ற வேண்டுமானால், பள்ளிப் பருவத்திலேயே பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உடல் உழைப்பிலே நம்பிக்கை வேண்டும். ஒவ்வொரு நாளையும் திருநாளாக எண்ணி, ஒடியோ, தாண்டியோ, எறிந்தோ பழக வேண்டும்.


பள்ளி நாட்களிலே அரும்புகின்ற இம்முயற்சி, நிச்சயம் கல்லூரிப் படிப்பை முடிக்கும் காலத்திற் குள்ளேயே கனியாகி சுவைதரும், புகழ் நிலைக்கு வளர்க் கும். இதைப் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தங்க ளுக்கு விட்ட சவாலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.


நற்றவ வானினும் நனி சிறந்த நம் நாட்டின் புகழை உலக அரங்கிலே உயர்த்துவோம் என்ற வீர சபதம் எடுத்து இளைஞர்களே! எழுச்சி பெறுங்கள். மலர்சியுற்று வருகின்ற சமுதாயத்தின் மாணிக்கங்களே! பயிற்சி பெறுங்கள். “என்னால் முடியும்” என்ற எண்ணத்திலே செயல்படுங்கள். மண் மாதாவின் மாசினைத் துடையுங்


Y .


2_L_GUIT GTGOLDL1 GLITL” Lq_35Gir (Track and Field Sports or Athletics) நாடெங்கும், நடக்க, ஆட்சி நடத்தும் நல்லோர்கள் ஆவன செய்யவும், உடற் கல்வி ஆசிரியர்கள் உளமார நற்பணி புரியவும், பயிற்சி பெறுகின்ற வாலி பர்கள் தளரா உழைப்பைத் தரவும் தொடங்கி விட்டால், தங்கப் பதக்கங்கள் குவியாமலா போய்விடும் நம் நாட்டில்? கிடைக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.