பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அதாவது, இம்முறையில் தாண்டும் ஒருவர், குறுக்குக் குச்சியின் மேல் குந்தி இருப்பது போலவே தாண்டமுடியும்.இவ்வாறு தாண்டுவதால், உண்மையிலே ஒருவர் தாண்டக்கூடிய உயரத்தைவிட% அடிவரை குறை வாகவே தாண்டுகிறார். அதனால்தான், இம்முறையில் தாண்டிய முற்கால வீரர்களால் 6 அடிக்கு மேல் தாண்ட முடியவில்லை. முதல் ஒலிம்பிக் போட்டியிலே வெற்றி பெற்ற அந்த வீரரின் சாதனை 5 அடி 11% அங்குலமே.


இந்த முறைத் தாண்டலில் எந்தக் காலால் தரையை உதைத்து மேலே குதிக்க எழும்புகிறாரோ, அதற்கு அடுத்த கால் குறுக்குக் குச்சியைத் தாண்டி முன் போக, குறுக்குக் குச்சியின்மேல் குந்தியிருப்பதுபோல நிலைவந்து, பிறகு முன்னே போகும் கால் முழு பலத்துடன் துள்ளிட, மறுகால் மறுபுறம் தரையை முதலில் மிதிக்கும். அதாவது உதைத்தெழும்பிய காலுக்கு மறுகால் முதலில் தரையைத் தொடும்.


இம்முறையில் இருக்கும் அடிப்படை குறைபாடு களை நீக்கி வேறு சில முறைகளையும் கண்டுபிடித்தனர் பலர். அவற்றில் ஒன்று


2. கிழக்கத்திய தாண்டு முறை (Eastern Cut) கத்தரிக் கோல் தாண்டு முறையில் குறுக்குக் குச்சிக்கு மேலே உதைத்தெழும்பிய காலால் எழும்பி மறுகாலை ஊன்றி முடிப்பது.அப்பொழுது தாண்டுகின்ற பக்கமாகவே முகம் திரும்பியிருக்கும். ஆனால், கிழக்கத்திய முறையில், உதைத்தெழும்பியக் காலுக்கு முன்னே மறுகால் தாண்டிச் சென்று, குறுக்குக்குச்சியை முழுதும் கடந்து, கீழே காலை ஊன்றும் போது, ஒடி வந்த திசையில் முகம் இருக்கும்.