பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [; 119


இந்த முறை, முன்னதுபோல் தான். உடலின் சமநிலை சக்தி குச்சிக்கு மேலே அதிக உயரத்திற்குப் போவதால் இம்முறையும் எடுபடவில்லை.


3. மேற்கத்திய முறை: (Western Roll) குறுக்குக் குச்சிக்கு மேலே உடலும் குச்சியும் இணையாக (Parellel) இருப்பதுபோல, குச்சியைத் தாண்டிக் கடந்து, மறுபுறம் கீழே இறங்கிக் காலுன்றல் இம்முறைக்குள்ள சிறப்பாகும். கத்தரிக்கோலின் தாண்டு முறையைவிட, இம்முறையில் உடலின் சமநிலை சக்தி இன்னும் தாழ்ந்து (குறைந்து) இருக்கும். முழு சக்தியையும் உபயோகப்படுத்தினால், முன்முறையைவிட இன்னும் அதிகம் தாண்டலாம்.


தாண்டும் முறை: நீளத் தாண்டலுக்கும் மும்முறைத் தாண்டலுக்கும் எந்தக்கால் உதைத்தெழும்பும் காலாகப் பயன்படுகின்றதோ, அதே கால்தான் இதற்கும் உதைத் தெழும்பும் காலாகப் பயன்படும். இங்கு இடது கால் களுக்காகக் கூறப்படும் முறையையே வலது காலைப் பயன்படுத்துவோர் அவருக்கேற்ற முறையில் கொள்க.


இடது காலை உபயோகிப்பவர் குறுக்குக் குச்சியின் இடது புறமாக இருந்தும், வலது காலர்கள் வலப்புறமாக இருந்தும் ஒடி வரவேண்டும்.


குறுக்குக் குச்சியின் நடுப்பாகத்திலிருந்து, முன்புற மாக நின்று, வலது கையை விறைப்பாக நீட்டினால் சரியாகத் தொடங்குகிற இடத்தைக் காலால் குறித்துக் கொள்ள வேண்டும். அதுதுான் நீங்கள் உதைத்தெழும்பும் இடமாக (Take ofSpot) இருக்கும். அந்த இடத்தின் தூரம் அந்தந்தத் துண்டுவோரின் உயரத்தைப் பொறுத்து வேறுபடும்.