பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 [T] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


-


s --


தாண்டுவதற்காகக் குறுக்குக் குச்சியை அணுகு வோர் 45 கோணத்திலிருந்தே ஒடி வரவேண்டும். 7 காலடிக்குள் (Step) ஓடிவருகின்ற முறையைத்தான் இன்று சிறந்த முறை என்று கூறுகின்றனர். அதற்குள்ளேதான் முழுவேகமும் துள்ளும் ஆற்றலும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் முதல் மூன்று காலடியைக் குறுக லாகவும், மீதி நான்கு காலடியை அவற்றை விட அகலமாக வும் வைத்து முழுவேகத்துடன் ஒடி வரவேண்டும்.


‘உதைத் தெழும் இடத்தில் தான் கால் பதிய வேண்டும் தாண்டுவதற்காக, அது பயிற்சிக் காலத்தில் தொடந்தாற்போல் பழகினால், இயல்பாகவே வந்துவிடும். அதற்கு முன் அதே இடத்தில் பதிய வேண்டுமே என்ற பயத்தோடு அணுகக்கூடாது. அதற்குப் பக்கத்தில் இருந் தாலும் பரவாயில்லை. ஒடி வரும் போதே, குறுக்குக் குச்சியின் மேலேதான் முழுக் கவனத்துடனும், நிதானத்