பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 121




துடனும் ஒடி வர வேண்டும். உதைதெழ இடது கால் பயன்பட்டால், ஒடத் தொடங்கும்போது, முதலில் இடது காலையே வைத்து ஒடி வரவேண்டும். வலது கால் பயன் படுத்துவோருக்குத் தொடக்கமும் வலது காலேதான்.


ஏழு காலடி ஒடி வரவேண்டும் என்றோம். ஏழாவது காலடி முழுக்காலும், அதாவது முன்பாதம் குதிகால் உட்பட முழு பாதமும் தரையில் பதிய ஊன்றி எழ வேண் டும். ஏழாவது காலடியை பதிய ஊன்றி எழ வேண்டும். ஏழாவது காலடியை சற்று அகல இடைவெளியுடன் வைத்தால்தான், மேலே கூறியவாறு ஊன்றி மேலே உதைத்தெழ முடியும்.


இடது காலை உதைத்தெழுந்தவுடன், இயல்பாக வலது கால் மேலே செல்லத் தொடங்கும். அதற்கு முன் உடல் விறைப்பாக இருக்கவேண்டும்.அப்பொழுதுமேலே