பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


எழும் உடலின் சமநிலையைக் காக்க, கைகள் இரண்டும் விரிந்தும் மடங்கியும் இயங்கும்.இடதுகை மேல் நோக்கி உயர்ந்து உடலை மேலே உயர்த்த உதவும்.அதேநேரத்தில், தலையைக் கீழே தாழ்த்துவதும், உடலை உடனே சாய்ப்பதும் அதிக உயரம் போவதைத் தடுக்கும் என்பதை நினைவுப்படுத்திக் கொள்க


உடலின் எடை முழுவதும் உதைத்தெழும் காலில் இருக்குமாறு உதைத்து எழுந்ததும், வலது கால் மேலே செல்லத் தொடங்கியதும், இடது காலும் மடிந்தவாறு பின் தொடர்கிறது. இடது கால் மடங்கி மேலே சென்றதும், தலையும் இடது தோளும் மண்ணை நோக்கிக் கீழே சாய்கிறது. இவ்வாறு மேலே செல்லும் போது, உடலின் கனமான பகுதியான இடுப்பும், அதன் அடிப் பாகமும் குறுக்குக் குச்சிக்கு மேற்புறம் சென்று கடக்கும் பொழுது உதைத்தெழும்பிய இடது காலே மீண்டும் தரையில் ஊன்றுகிறது. கைகள் கீழே ஊன்றிக் கொள்ள இடது கால் தரையிலும், வலது கால் சற்று உயர்ந்து மேல் நோக்கி இருக்க, ஓடிவந்தத் திசைப் பக்கமாகவே முகம் இருந்தாலும் தாண்டல் முடிவு பெறுகிறது.


உதைத்தெழுந்த காலேதான் குச்சியின் மறுபுறம் ஊன்றுகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்க. வலது கால் சற்று உயர்ந்து நிற்கும். தாண்டும் போது, சம நிலையை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.


இதற்கான பயிற்சிகளை எவ்வாறு பழக வேண்டும்?


உதைத்தெழும் காலாலே தான், தாண்டி முடிந்த பிறகு ஊன்ற வேண்டும் என்பது தான் இம் முறையின்