பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


கொண்டே போகிறது.கண்ணாடிநார்க் குழாய்க் கோலில் ஏற்படுகின்ற வளைவு, தாண்டுவோரை அடியிலிருந்து1% உயரத்திற்கு மேலே கொண்டு போகிற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. மூங்கிலால் ஆன கோலில் அந்தத் தன்மை இல்லாததால், இன்னும் சிறந்த முன்னேற்றம் வரவில்லை. ஆனால் வரும் என்ற நம்பிக்கை இன்னும் நமக்கு வாா மலும் இல்லை. எவ்வாறு கோலூன்றித் தாண்ட வேண்டும்?


1.தாண்ட உதவும் கோலுடன் ஓடிவரல் 2. கோலை, பெட்டியில் குத்தி கோலுடன் மேலே எழுதல்.


3. குறுக்குக் குச்சியைக் கடத்தல். 4. கீழே காலூன்றல்


எனும் இந்நான்கு திறன் நுணுக்கங்களை செம்மையாக உணர்ந்து, சிறப்பாகப் பழகிக் கொண்டால், அபாயம் நேராவண்ணம் தாண்டலாம். அருமையான சாதனையை யும் உண்டாக்கலாம்; அழியாப் புகழையும் உலகிலே பெறலாம்.


1. கோலுடன் ஓடி வருதல்: தாண்ட உதவுகின்ற கோல் மூங்கில், அலுமினியம், கண்ணாடி நார் போன்ற வற்றினால் ஆகி இருக்கலாம்.அதனைத்துக்கிக்கொண்டு ஓடிவரப் பழகுவதற்கு முன்னர், அதை எவ்வாறு எங்கே பிடித்துக் கொண்டு ஓடி வருவது என்பது மிக முக்கிய மாகும்.


இடதுகையை கோலின் முன்னே (கோலின் அடிப் பாகத்திற்கு அருகில் உள்ள பாகம்) பிடித்துப் பழகு