பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


குறிப்பு: கீழேயுள்ள இடது கைதான் மேல் நோக்கிப் போய் வந்து கையுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமே, தவிர வலதுகை கீழே இறங்கக் கூடாது.


கோலை ஊன்றிய உடனே, தாவத் தொடங்கும் அடையாளக் கோட்டிலே இருக்கின்ற கால்களும், உடலும் கைகளின் உயரமும் ஒரே நேர்க் கோட்டிலே இருக்கும்.அங்கிருந்துதான் தாவத் தொடங்குகின்ற நிலை தொடங்குகிறது.


3. குறுக்குக் குச்சியைக் கடத்தல்: ஒரே நேர்க் கோட்டின் நிலையில் இருந்த கால், உடல், தலை, எல்லாம் ஒருங்கிணைந்த இரண்டு கைகளின் இயக்கத்தால், இயங்கத் தொடங்கும். தலைபின்புறமாக சிறிது சாயும். கண்கள் நிமிர்ந்து மேல் நோக்கி உயரேயுள்ள குறுக்குக் குச்சியை நோக்கும் இறுக்கமாகப் பிடித்திருந்த இரண்டு கைகளும், ஊன்றும் பெட்டியில் திடீரென்று வேகமாக ஊன்றிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டபிறகு, இடது காலின் குதிகாலும் முன் காலும் ஒரே சமயத்தில் கீழே தரையை உதைத்து எழ, வலது கால் ஒடத் தொடங்குவது போல், மேல் நோக்கி எழும்.


ஒடும் நிலை போல, இடது கால் வலது காலைத் தொடர, பற்றிக் கொண்டிருக்கும் கைகளுடன் உடல், கோலில் தொங்கிக் கொண்டிருக்கும்.அதன் பிறகு, கைகள் இரண்டும் கொஞ்சம் தளர்ந்து, மேல் நோக்கி விறைப்பாக நிமிர, கால்கள் இரண்டும் கீழிருந்து தோளுயரத்திற்கு மேலே வந்து, இடுப்பின் விரைவினால் மேலும் மேல் நோக்கிப் போகும். அவ்வாறு மேலேறும் உடல், கோலுடன் ஒன்று படுவதுபோல ஒருங்கிணைந்துபோக வேண்டும்.