பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பெருமை மிகும் பாரதத்தின் பிரதிநிதியாக, தமிழகத்தி லிருந்து தாங்கள் செல்லப்போகின்ற நினைவு எழுந்ததும், உடல்சிலிர்க்க, உணர்ச்சி வசப்பட்டவராய், பயிற்சியாளர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


இள உள்ளங்களின் ஏக்கத்தினை களங்கமிலா முகத்திலே கண்டு, புரிந்துகொண்ட பயிற்சியாளர், இனிய புன்முறுவலினை உதிர்த்தார்.அவர்கள் ஐயத்தைப் போக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்பதை உணர்ந்தார். அவர்களைப் பார்த்துத் தலையசைத்தார்.


வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்புகள்போல, மாணவ மாணவியரிடமிருந்து கேள்விக்கணைகள் வந்து குவியலாயின. ஒவ்வொருவரும், தாங்கள் விரும்பியவா றெல்லாம், ஒலிம்பிக் பந்தயப் போட்டிகளைப் பற்றியும், வரலாறு பற்றியும், அதன் பயிற்சி முறைகளைப் பற்றியும் கேட்டனர். அவ்வாறு அவர்கள் கேட்ட வினாக்களும்


விடைகளும், கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.


உடலாளர் (Athlete) என்பவர் யார்?


உடலைத் திறம்பட ஆள்பவர்களையே உடலாளர் என்றனர். முற்காலத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வீரமுடனும் விவேகமுடனும் பங்கு பெற்று, போட்டி யிட்டு வெற்றி பெற்று, பரிசுபெற்று மகிழ்பவர்களையே உடலாளர் என்று கிரேக்கர்கள் அழைத்தனர்.


இசை, குதிரையேற்றம், உடலழகுப்பயிற்சிகள் முதலிய போட்டிகளில் பங்கு பெறுகின்ற அத்தனை பேருக்கும் உடலாளர் என்றே பெயர்.ஆனால், காலம் மாற மாற, உடலழகுப் பயிற்சிகளைச் செய்கின்றவர்களை மட்டுமே குறித்தனர். அதற்குப் பிறகு, உடலாண்மைப்