பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வளைந்து தாங்கிக் கொண்டிருக்கும் கோல், அப்பொழுது நிமிர்ந்து செங்குத்தாக இருக்கும். கீழே இருந்த இடுப்பு, அசைவுடன், தோள் அளவுக்கு வந்த உடன், வலது கால் மீண்டும் உந்தியவாறு மேலே ஏறும். அவ்வாறு உந்தப் படுவதால், (தாண்டுகின்ற மணற் பகுதியைப் பார்த்திருக்கும் முகம்) உடல் ஓடிவந்தத் திசைப் பக்கமாகத் திரும்பும். இப்பொழுது, கைகளின் சக்தியால், செங்குத்தாக நிற்கும் கோலின் உதவியால், உடல் நிமிர்ந்து - தலைகீழாக, கால் மேலாக நிற்கிறது.


உடனே, உடலை மேல் புறமாகவும், கோலை கீழ்ப்புறமாகவும் தள்ளுகின்ற நிகழ்ச்சியானது ஒரே சமயத்தில் நடக்கிறது.அதேநேரத்தில், கால்கள் இரண்டும் குறுக்குக் குச்சியைக் கடக்கவும், மேலெழுந்த உடல் மறுபுறம்போகவும் முடிகிறது. முதலில் வலது கால் சென்ற பிறகு தான் இடது கால் செல்கிறது. உடல் கடந்த பின், கைகள் இந்தப்புறமே இருந்து கோலை தள்ளிவிடவும், கைகளும் தோள் பகுதியை குச்சியில் படாமல் கடக்கச் செய்கின்றன.


4. காலூன்றல்; மேலே உள்ள குறுக்குக் குச்சியை, உடல் முழுதும், கைகளும் கடந்த பிறகு, சாதாரணமாக எப்பொழுதும் உள்ள இயல்பான நிலையில் அங்கிருந்து ஒடி வந்த திசைப் பக்கமாகத் திரும்பியே, கீழே குதிக்க வேண்டும். அவ்வளவு உயரத்தில் இருந்தா என்றால், அதற்குத்தான், பயம் இல்லாதவர்கள், தைரியசாலிகள், ஆண்மையாளர்கள், நெஞ்சுரம் நிறைந்தவர்கள் இப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தகுதி பற்றிக் கூறும்போது முன்னரே குறிப்பிட்டோம்.கொஞ்சம் மாறி விழுந்தாலும் கால் பிசகிக் கொள்ளும், தவறினாலும்