பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


கால்களில் வலுவிருந்தால்தான் உயரத்தில் குதிக்க முடியும் என்பதால், எடைப் பயிற்சியுடன், ஒடுதல், கயிறு தாண்டல், துள்ளல் போன்ற பயிற்சிகளை செய்க.


வாரத்திற்கு மூன்று முறை தாண்டிப்பழக்கம் செய்க. தாண்டுவோருக்கு மனதைரியம், தன் ஊக்கம், நெஞ்சுரம் தேவையிருப்பதால், அவற்றை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்துக.


தலைகீழாக கைகளில் நிற்பவர்கள், நடக்கக் கூடிய வர்களுக்கு இந்நிகழ்ச்சி அதிகத் துணையாக இருக்கும். அத்துடன் உயரத் தாண்டும் ஆற்றல் உயரமாக இருந்தால் போட்டியில் சாதனை நிகழ்த்த இன்னும் வாய்ப்பாக இருக்கும். --