பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


சமநிலையை சரிபார்த்து இருக்க-குண்டினைப் பிடித் திருக்க வேண்டும். .


இவ்வாறு பிடித்த குண்டினை, வலது தோளில், தோள் எலும்புக்கு மேலே, கன்னத்திற்கு அருகாமையில் வைத்து. கையில் பிடிப்பு (Grip) உறுதியாகக் கிடைக்கும் வரை வைத்திருக்க வேண்டும். அப்படி பிடிப்பு சரியாகக் கிடைக்காத வரையில், பிடிப்பை தளர்த்தி, குண்டைக் கன்னத்தோடு சேர்த்து, அணைத்தபடி, உறுதியான பிடிப்புக்கு சரிசெய்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு பிடித்திருக்கும்போது, கையில், தோளில் உள்ள குண்டு, தோளுக்குப் பின்புறம் போகக்கூடாது. அவ்வாறு பின்புறம் கொண்டு போனால், சமநிலை (Balance) கிடைக்காது. அத்துடன், துக்கித் தள்ளவும் (Push) முடியாது. ஆகவே, தோளுக்கு நடுவிலே வைத்து, முன்னால் விரைந்து தள்ளவேண்டியதுதான் தலைசிறந்த முறையாகும்.


உள்ளங்கையின் உயர்ந்த சதைப் பிடிப்பான மேற்


புறத்தில் தான் குண்டு இருக்க வேண்டும்.