பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 145


7 அடி விட்டமுள்ள வட்டத்திற்குள் குண்டை வைத்து எறியும் உடலாளர் (Athlete), தோளிலிருந்தே குண்டினைத் தள்ள வேண்டும். எறியக் கூடாது. (Throw) எறிய முயன்றாலும் முடியாது. குண்டினை எவ்வாறு எறிய வேண்டும்?


குண்டினைத் தோளில் இருத்தி, சரியான பிடிப்பு வரும் வரை அழுத்திப் பிடித்து, எறிவதற்குரிய திசைக்கு எதிர்த்திசையில் முகம் வைத்து, தன் உடலின் எடை முழுவதையும் வலது காலில் வைத்து, இடது காலை சிறிது ா க்கியவாறு நின்றிருக்கும் நிலையிலிருந்து, இடது காலை வேகமாகப் பின்னோக்கி இழுத்து, முன்னோக்கி தைத்து, அவ்வாறு இடது காலை முழுதும் நீட்டி யிருக்கும் போது, எடை முழுதும் வலது காலில் இருக் கிறது. தலையும் குனிந்திருக்கிறது. உடலும் எதிர்த்திசை யப் பார்த்தே இருக்கிறது. இடதுகை கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. (படம் காண்க)