பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 13


போட்டிகளில் (Athletics) கலந்துகொள்கின்ற விளை யாட்டு வீரரை மட்டுமே உடலாளர் என்றனர் (Sportsman). உடலாளர் என்பவரை உடலைத் தன் திறமையால் ஆண்டு, உயர்ந்த வீரச் செயல்களை செய்பவர் என்று பொருள் படக் கூறினர்.


விளையாட்டுப் போட்டிகள் என்றால் என்ன?


நடத்தல், ஒடல், தாண்டல், எறிதல், தள்ளல், இழுத்தல் போன்ற பண்புகள் எல்லாம் மனிதனுக்கு இயற்கையாய் அமைந்த குணங்களாகும். இந்தப் பண்பு களிலே ஆற்றலை விரிவுபடுத்திக் கொள்ளச் செய்து, அவைகளிலே போட்டி ஒன்றை ஏற்படுத்தி, மக்களின் சக்தியை உலகுக்குக் காட்டவும், உற்சாகப் படுத்தவுமே விளையாட்டுப் போட்டிகள் தோன்றின.


உலக நாடுகள் அனைத்திலும் இப்பண்புகளும் முறைகளும் தோன்றினாலும், பேரளவில் முதலில் பின்பற்றிய நாடு கிரேக்க நாடுதான்.அங்கேதான் ஒலிம்பிக் பந்தயமே தோன்றியது.


கிரேக்க நாட்டிற்கு அந்த வாய்ப்பு வரக் காரணம் என்ன?


கிரேக்க நாட்டைச் சேர்ந்த அண்டை அயல்நாடுகள் அனைத்தும் தாங்களே பலம் வாய்த்தவர்களாக வரவேண்டுமென்ற போட்டி மனப்பான்மையை வளர்த் துக் கொண்டன. அத்துடன் பொறாமையும் சேர்ந்து கொண்டது. பலத்த போட்டியின் காரணமாக பயங்கர மான சண்டைகள் உண்டாயின. ஆண்டுக் கணக்காக யுத்தம் நடந்தது. அதற்காக, தங்கள் தாயகத்தை பகை வரிடமிருந்து காக்க, ஒவ்வொரு ஆண்மகனும் நல்ல உடல்