பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


எறியும்போதோ, அல்லது எறிந்து முடிந்த உடனோ வட்டத்திற்கு வெளியே வருவதும், விழுவதும் தவறு’ என்று கூறப்படும் அந்தச் சிறு வட்டத்திற்குள் எவ்வளவு வேகம் கிடைக்குமோ, அவ்வளவு வேகத்தையும் பெற்றே எறிய வேண்டும்.


ஏன் இரும்புக்குண்டினை சுமாராக 50 கோணத் திலே வேகமாக எறிய வேண்டும் என்றால், அப்பொழுது தான் அது மேலே கடந்து செல்லும் தூரம் செல்ல முடியும். புவியின் இழுக்கும் சக்தியை மீறி, அது அதிக துரம் கடக்க வேண்டுமல்லவா? அதனால்தான், உயரமாக எறியும் போது, ஏற்கெனவே பெற்ற வேகத்துடன், இயல் பாகப் பெற்ற உயரத்தால், இனிதாக அதிக தூரத்தை இரும்புக் குண்டால் கடக்க முடிகிறது.


உடலின் சமநிலையை (balance) எப்பொழுதும் இழந்துவிடக் கூடாது.


எறியும் போது, வட்டத்திற்கருகில் வந்து, வட்ட தி திற்கு வெளியே எவ்வளவு தூரம், எறியும் கையை முழுமை யாக நீட்டி எறிய முடியுமோ, அந்த அளவுக்கு, எறியும் போது தூரத்தில் அதிக அளவு பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை எறிபவர் மறக்கவே கூடாது.


நம் நாடு இப்போட்டியில் பரிசு பெற முடியுமா? அதற்காக என்ன பயிற்சிகளை செய்ய வேண்டும்?


1896ம் ஆண்டு இப்போட்டியின் சாதனை 369%” 19096 50_g|LL, 194856'2”. 19566 60’. 1960 64’,6%”. 1964 66'8%”.1968ல் 68.4% இன்று உலக சாதனை7,5%”.இதை ஏற்படுத்திய ஒலிம்பிக் வீரர் ராண்டி மேட்சனுடைய