பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தட்டெறியும் போட்டி, கிரேக்க நாட்டிலேயே நடை பெறுகிறது. கிரேக்கர்களே வெற்றி பெற வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. எல்லோரும் கிரேக்க வீரர்களே வெற்றி பெறுவார்கள் என்று நம்பினர். அப்படித்தான் சூழ்நிலையும் இருந்தது.


கடைசியாக, தன் முயற்சியாலே ஒலிம்பிக் போட்டி யிலே கலந்து கொண்ட ராபர்ட், போட்டியிலுள்ள தட்டைத்துக்கிப் பார்த்துவிட்டு எடை இலேசாக இருப் பதை உணர்ந்தார். கிரேக்க வீரர்களோ, தங்கள் கடைசி ‘எறி’யினை எறிந்துவிட்டு, தாங்களே வெற்றி வீரர் என்று கருதி எறியும் களத்தைவிட்டே சென்றுவிட்டனர். கடைசியாக வந்த ராபர்ட், பதட்டப்படாமல் எறிந்தார்95 அடி துரத்தை அவரே வெற்றிவீரரானார்! எப்படி? தன் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. அவசரப்படவில்லை அதனால் வெற்றி பெற்றார்! தங்கப் பதக்கத்தை அடைந்


தாா.


இரண்டாவதாக, பிறர் எப்படி எறிகிறார் என்பதைப் பற்றியே கவலைப்படாமல் எறிய வேண்டும். அத்தகைய மன நிலை வேண்டும். 1956, 1960,1964, 1968ல் நடைபெற்ற நான்கு ஒலிம்பிக் போட்டிகளில், அதாவது மெல்போர்ன், ரோம், டோக்கியோ, மெக்சிகோ ஆகிய நகரங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற ஆல்பர்ட் ஆர்ட்டர் (Albert orter) என்ற அமெரிக்கர், 16 ஆண்டு காலமாக இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற அவர், பிறர் எப்படி எறிகிறார்கள், தம்மை வென்றுவிடுவார்களோ என்று அஞ்சவுமில்லை, அதைரியப்படவுமில்லை.


தனது 19ம் வயதில் 1956ம் ஆண்டு 184'ா” எறிந்து


வெற்றி பெற்றார்.1960ல் 1942 மும் 1964ல் 200.1% எறிந் o