பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


திண்மையோடும் தீரத்தோடும் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு அரசும் விரும்பியது.


இப்பொழுதுபோல அணுகுண்டு யுத்தமோ, பீரங்கி போன்ற அழிவுப் படைகளோ அக்காலத்தில் கிடையாது. இரண்டு பகை வீரர்களுக்கிடையே நடக்கும் தனிச் சண்டைதான் அடிக்கடி நடந்து கொண்டிருந்ததால், ஒவ்வொரு படைவீரரும் தன் தேகபலத்தை நம்பித்தான் வாழ்ந்து தீரவேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆகவே, தனிப்பட்ட ஒரு ஆண் மகன் உடல் வளத்தோடும், பலத்தோடும் இருக்க இதுபோன்ற உடலழகுப் பயிற்சி களைச் செய்தான். தனி மனிதனின் சாதனையானது நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமையைத் தேடித் தந்தது. போர்தான் விளையாட்டுப் பந்தயங்களுக்கு முக்கிய காரணமா?


அப்படி சொல்வதற்கில்லை. நாட்டுமக்கள் அனை


வரும் உடல் அழகையே முதலில் விரும்பினார்கள். அழ கான உடலமைப்பின் அசைவை, அங்கலாவண்யத்தை ரசித்தார்கள். புலவர்கள் உடலைப் பற்றிக் கவிபாடினார் கள். சிற்பிகள் சிலைசெதுக்கினார்கள், உடலழகுக் கவர்ச்சி யிலே உலகையே அவர்கள் மறந்திருந்தார்கள்.


வாழ்க்கை முழுவதுமே வனப்புள்ளது, வளம் உள்ளது, என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களைப் போல, தலையாய வாழ்வினை அவர்கள் வாழ்ந்தனர். ‘நல்ல உடலில் நல்ல மனம்’ என்ற கொள்கை யைக் கடைப்பிடித்து, அந்த அறிவில், ஆழ்ந்த சிந்தனையில், அமைதியில் ஒழுக்கமான வாழ்வில் இன்பச் சுவையைக் கண்டனர்.அந்தச்சுவையின் முதிர்ச்சியால்தான் ஒலிம்பிக் பந்தயங்களை உண்டாக்கினர்.