பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


கடிகாரம் சுற்று முறையைப் போல தட்டினைச் சுற்றி எறிக.


நன்றாகப் பழகாத நிலையில், தட்டினை எறியக் கூடாது. வேகமாகவும் எறியக் கூடாது. தட்டு மேலும் கீழும் சுழல்வது போல் எறியக் கூடாது. தட்டினை அதிக மாக இறுக்கிப் பிடிக்கும் போது தான் மேலும் கீழும் சுழலும். ஆகவே, கட்டை விரலை ஆதரவாகப் பயன் படுத்தி, தட்டினை சுமுகமாக எறிந்து பழக வேண்டும்.


வாரத்திற்கு மூன்று நாள் எறிந்து பழகுக. குறைந்தது ஒரு மணிநேரமாவது எறிந்து பழக வேண்டும். எறிவதற்கு சளைக்கவே கூடாது.


எறியும்முன் உடலை நன்கு பதப்படுத்திக்கொள்ளுங் கள். மெதுவாகத் துள்ளிக் குதித்து ஒடுதல், எடையில் லாமல் கைகளை விரித்தும் மடக்கியும் பல பயிற்சிகளைச் செய்தல், போன்ற பயிற்சிகளை அரைமணி நேரமாவது செய்து, உடல் பக்குவ நிலைக்கு வந்த பின்னரே, எறிந்து பழக வேண்டும்.


3. வேலெறிதல் (JavelinThrow)


வேலெறிதல் என்றால் என்ன? அதற்குரிய தகுதிகள் ?


1765 பவுண்டு எடைக்குக் குறையாத 8 1/2 அடி நீள முள்ள வேல் போன்ற கூரிய முனை உடைய கோலினை, ஒடி வந்து எறிவதையே வேலெறிதல் என்கிறோம்.


பழங்கால போர் முறைகளில் ஈட்டியும் வேலும் பயன்படுத்தப் பெற்றன. வேட்டை காலங்களில் கூட,