பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 161


ஒடத் தொடங்கும்போது இம்முறையில் வைத் திருந்து, பிறகு வேகமாக ஒடி எறியும் பொழுது முன்கை மாறிவரும். சமநிலைக்கு மேலே இருந்த பிடிப்பு” கீழ்ப்புறமாக மாறி வருவது போல முன்கை மாற, அதா வது முன் கையை வளைக்க, கை தோளுக்கு மேலே வரும். தோளுக்கு மேலே இருக்கும் வேலினைத் தூக்கி வீசி


எறியவேண்டும்.


இது ஒருமுறை, முன்னாளில் பின்பற்றப்பட்ட எளிய முறையும், அதே சமயத்தில் ஏற்ற முறையுங் கூட


பிடிக்கும் பகுதியில் பிடிப்பிருக்க, தொடக்கத்தில் வேலினைப் பிடிக்கவேண்டும். அதாவது தோளுக்கு மேற்புறம் (எறியும் கையின் மேற்புறம்) கூர்முனை, முகத் திற்கு முன்னதாகவும், வால்முனைமுதுகுப்புறம் நீண்டி ருக்குமாறும் இருக்கவேண்டும். கட்டைவிரல் ஒரு பக்க மும், சுட்டு விரல் அடிப்பாகமும் இருக்க; மற்ற மூன்று விரல்களும் கட்டை விரல் பகுதியில் சுற்றியிருக்குமாறு தான் பிடிப்பு (Grip) இருக்க வேண்டும்.