பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [T] 165


டலுக்கிணையாக வரும். அதே சமயத்தில் அடுத்த காலடியாக இடது காலை முன்புறமாக ஊன்றி,


கோலினை வீசி எறிய வேண்டும்.


ஒடிவரத் தொடங்கும் போது, ஒடிவரும் அடை யாளக்கோட்டில், இருகால்களையும் சேர்த்தாற் போல் வைத்து நின்று கொண்டிருந்து, பிறகு இடது காலை முதலில் முன்னே வைத்து ஒடத் தொடங்க வேண்டும். ஒடத் தொடங்கும் பொழுது உடலின் எடை முழுதும் வலது காலில் இருக்கும். ஆனால் எறியும் பொழுது,


டலின் எடை முழுதும் இடது காலில் இருக்கும்.


அப்பொழுது, எறிகின்ற கையான வலது கையை நன்றாகப் பின்னுக்குக் கொண்டு சென்று, உள்ளங்கை மேலே தெரியும்படியாக வேலினைப் பிடித்திருந்து, முழங்கையை வளைத்து, பின் விறைப்பாக நீட்டி, 35 கோணத்திலே போகுமாறு விடுவித்து எறிய வேண்டும்.


முதன் முதலாக வேலினைப் பிடிக்கும் போது கர்முனை சிறிதளவு கீழ்நோக்கி இருக்கும். எறியும் போது கர்முனை சிறிதளவு மேல் நோக்கிப்பார்த்திருக்கும். எதிர் காற்றாக இருந்தால், இன்னும் சிறிதுதாழ்வான கோணத் திலே எறிக. காற்றின் துணை இருந்தால், இன்னும்


பரமாக எறிக.


இடது காலை ஊன்றி எறிந்த பின், வலது கால் முன்னே ஊன்றியிருக்க, இடது கால் பின்னே வந்துவிடும். முன் கையிலுள்ள மணிக்கட்டின் அழுத்தத்தால் வேல், காற்றில் பறப்பதைக் கண்களால் பார்வையிட வேண்டும்.


இடது காலை முன்னே வைத்து எறிந்த பின் ஏன் வலது கால் முன்னே வரவேண்டும் என்றால், ஒடி வந்து