பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அதிக வேகத்தால் எறியும் போது, உடல் சமநிலையை இழக்கும். அதனால் தடுமாறி விழவும், எல்லைக் கோட்டைத் தாண்டிவிடவும், விழுந்து விடவும் நேரலாம். அதைத் தடுக்கவே, வலது காலை முன்னால் ஊன்றி, இடது காலைப் பின்னால் தூக்கி நிறுத்தி, உடல் சமநிலையை உண்டுபண்ணிக் கொள்ள வேண்டும்.


இதற்குரிய பயிற்சி முறைகள் யாவை?


உலகில் உள்ள சிறந்த எறியாளர் (Thrower) எல்லாம், மேற்கூறிய இரண்டாவது முறையையே பின்பற்றுகின் றனர். உலக சாதனை செய்திருக்கும் வெற்றி வீரரான ஜேனிஸ் லூசிஸ் (Janis Lusis) என்ற ரஷ்யரின் சாதனை 3003” -


எறியக் கூடிய வலிமையான புஜபலம் உள்ள அத்தனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இப் போட்டி முறையில் கலந்து கொண்டு வெற்றி பெறச் சிறப்பான வாய்ப்பு இருக்கிறது. கிரிக்கெட் பந்தை அதிக தூரம் எறியும் ஆற்றல் உள்ள இளைஞர்கள், மாணவர்கள்கூட இந்நிகழ்ச்சியைத் தாராளமாகப் பழகலாம். போட்டியில் பங்கு பெறலாம்.


ஒடி வருகின்ற துரத்தைக் குறித்துக் கொள்ள, எத்தனை அடி தேவை என்பதை நிர்ணயித்துக் கொள்ள, பலமுறை ஒடிப் பார்த்து, எந்த இடத்தில் இருந்து ஓடி வந்தால், இயல்பாக எறியும் ஆற்றல் வருகிறது என்பதைக் கணக்கெடுத்து, அந்த தூரத்தையே இறுதி வரை கடைப் பிடிக்க வேண்டும்.


முழுவேகத்துடன் ஓடிவரும்போது, எந்த இடத்தில் குறுக்குக் காலடியைத் தொடங்க வேண்டும் என்பதைக் கணக்கெடுத்துக் குறித்துக் கொள்ளவும்.