பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா U 15


ஒலிம்பிக் பந்தயங்கள் எவ்வாறு தோன்றின?


ஒலிம்பியா என்ற இடத்திலே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதால், இவைகள் ஒலிம்பிக் பந்தயங்கள் என்று பெயர் பெற்றன. இந்த ஒலிம்பிக் பந்தயம் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.


சீயஸ் (Zeus) என்ற தலைப்பெருங் கிரேக்கக் கடவுள், தன் பகைவரைக் கொன்று வெற்றி கண்டதற்கான, இப் போட்டியினைத் தொடங்கிவைத்தார் என்று ஒரு கிரேக்க புராணம் கூறுகிறது.


கிரேக்க நாட்டிலே, முன்னொரு காலத்தில் மக்க ளிடையே மதக் குழப்பமும் மற்றும் மனவேற்றுமைகளும் நிறைந்து கிடந்தன. அத்துடன் பிளேக் என்ற கொடிய நோயும் பரவி மக்களை அழித்தபோது, அசரீரி வானத் திலே தோன்றி, ஆணையிட்டதாம். அந்த ஆணையின் படியே இபிடஸ் என்ற அரசன் ஒலிம்பிக்பந்தயத்தைத் தொடங்கினான் என்று கிரேக்க புராணம் ஒன்று கூறுகிறது.


மூன்றாவது கதை, ‘ஹிராகிலிஸ்’ என்ற அரசன், தன்னுடையே எதிரியான அகஸ்’ என்பவனை மல்யுத்தப் போட்டியில் கொன்று தீர்த்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தன் தந்தை சீயஸ்’ என்பவருக்காகக் கோயில் ஒன்றை ஒலிம்பியா என்ற இடத்திலே கட்டி, அங்கே ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த அவரே விளையாட் டரங்கத்தையும் அளந்து கட்டி இதுபோன்ற பந்தயங் களைத் தொடங்கினார் என்ற ஒர் கதையும் உண்டு.


கதைகள் எவ்வாறு இருந்தாலும், கிரேக்கர்கள் கொண்ட நல்ல நோக்கம் வெற்றி பெற்றது. உடலாலும்