பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தோள்பட்டை, உடலின் மேல்பகுதி, மற்றும் கைகள் எல்லாம் நன்கு வலியனவாக இருக்க வேண்டும்.


கம்பியில் கைகளினாலே ஏறி இறங்காமல் (Bal Exercise), குண்டு எறிந்து பழகுதல், உயரத் தாண்டிப் பழகுதல், கயிறு தாண்டிக் குதித்தல் போன்ற பயிற்சி களைத் தொடர்ந்து செய்யவும்.


மற்றும் விரைவோட்டக்காரர் செய்கின்ற பயிற்சி அனைத்தையும் செய்து பழகவும்.


இதைத் தொடர்ந்து பத்தாண்டு காலம் பயிற்சி செய்து வந்தீர்களானால், எளிதாக எல்லா திறன் நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள முடியும். எறியும் திறன் தானாகவே கை வந்தக் கலையாகி விடும்.


ஒடிவரத் தொடங்கும் இடம், குறுக்குக் காலடியைத்


தொடங்கும் இடம் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொண்டே எறியத் தொடங்குதல் நலம்.


‘பிடிப்பு முறையை அறிந்தவுடன், முதலில் நின்று கொண்டே எறிந்து பழகுக. வலது கையை தோளுக்கு மேலிருந்தவாறு வேலினைப் பிடித்தவாறு, முடிந்தவரை பின்னால் நீட்டியிழுத்து, பிறகு முழங்கையை நீளச் செய்து எறியப் பழகுக. -


இரு கால்களும் மாறிமாறி இயங்க, இடுப்பும் (Hip) நன்றாக ஒத்துழைக்க வேண்டும். உடலின் எடையைத் தாங்குவதோடு, சமநிலையையும் பாதுகாப்பதால், கால்கள் நல்ல வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து எடைப் பயிற்சிகள் செய்க.


வேலினை எறியும்பொழுது, அதனுடன் கடைசி வரை தொடர்பு கொள்வன மணிக்கட்டும் சுட்டு விரலும்