பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [...] 171


சங்கிலிக் குண்டினை எவ்வாறு பற்றி, சுழற்றி எறிய வேண்டும்?


இரும்புக் குண்டிலே உள்ள கொக்கியில் நீளமான இரும்புக் கம்பி சேர்க்கப் பெற்று, அந்தக் கம்பியின் தலைப்பிலே கைப்பிடியும் இருக்கும். அதைப்பிடித்துத் தான் சுழற்ற வேண்டும். கம்பியில் உள்ள கம்பி வளை யத்தை முதலில் இடது கையால் பற்றி. அதன்மேலே வலது கையை வைத்து அழுத்தமாகப் பற்றியே சுழற்றும் தன்மையை முதலில் அறியவேண்டும். இதற்குக் கையுறை களையும் (Gloves) உபயோகிப்பதுண்டு.


எறியத் தொடங்குவதற்குமுன்-கம்பியுள்ள இரும்புக் குண்டை வலது காலுக்குப் பக்கத்திலே வைத்து, எறியப் போகும் திசைக்கு எதிர்ப் புறமாகத் திரும்பி நின்றிருக்க வேண்டும். அவ்வாறு நிற்கும் நிலை, அகல வைத்திருக்கும் கால்களின் இடைவெளி தோள் அகல அளவு இருக்க வேண்டும்.


வலதுபக்கமாகக் கீழே கிடக்கும் குண்டினை எடுத்து, தலையைச் சுற்றி தோள்களுக்கு மேலே வலமிருந்து இடமாகச் சுற்ற வேண்டும். இரும்புக்குண்டு இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கால்மடிந்திருக்குமாறு அதாவது இடது பக்கம் குண்டு வந்தால் இடதுகால் வளைந்திட, வலதுகால் பக்கம் வந்தால் வலது கால் வளைந்திடநிற்க வேண்டும். பின்னர் குண்டு, வலதுபக்கம் தொடங்கும் போது கீழிருந்தும், இடது பக்கத்திற்குக் கொண்டுவரும் போது, தோள் அளவில் உயர்ந்தும் வருவது போல, தலையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டு வரவேண்டும்.