பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 173


வளைகின்ற உடலமைப்பு இங்கு மிகமிக முக்கியம் என்பதைக் கவனிக்கவும், கைகளுடன் குண்டு தலையைச் கற்றும்போது, உடல்பின்புறமாக வளையும், இடப்புறமாக ஆண்டு வரும்போது, வலதுபுறம் இடுப்பு வளையும்போது துகாலும் இடதுபுறமாக வளையும். வலப்புறமாகக் தண்டு வரும்போது, இடப்பக்கமாக இடுப்பு வளைய வலதுகால் வளையும்.


இவ்வாறு சுற்றுகின்ற முறையில், ஒவ்வொரு சுற்றிலும் மற்றச்சுற்றைவிட அதிகவேகம் இருக்கவேண்டும். இரும்புக் குண்டை.இவ்வாறு சுற்றி விட்டு, மேலும் வேகம் பெறுவதற்காக, தானே மூன்றே முறை சுற்றி எறிய வேண்டும்.இச்சுற்றுக்களை எவ்வாறு சுற்றுவது?


முழு அளவு கைகளை நீட்டியே கம்பியை சுற்றிவிட வேண்டும். எப்பொழுதும் குண்டையே கண்கள் பார்க்க வேண்டும். உடலைச் சுற்றி ஒடுகின்ற குண்டானது மேலே வரும்போது முழுக்கையும் நீண்டிருக்கவேண்டும்.


வலதுபுறம் குண்டு வந்தவுடன், முதல் சுற்றுககாக இடப்புறம் திரும்பவேண்டும். அதாவது குதிகாலாலே நான் அடி எடுத்து வைக்கவேண்டும். ஒரு வட்டம் என்பது ம0 டிகிரி அல்லவா! அதிலே பாதியான 180 டிகிரியை ஒரு கற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம். இடுப்பும் கால்களுமே சுற்றுதற்கு உதவும்.


அடுத்த சுற்றுக்கு இடதுகால் ஊன்றிக் கொள்ள, வலது கால் இடது காலைச் சுற்றி வந்து முன் பாகத்திலே நிற்க, முழங்கால் சிறிது வளைய, இடுப்பு பின்புறம் வளைந்திருக்கவேண்டும். இப்பொழுது இடதுகாலில் தான் உடல் எடை முழுதும் நிற்கும். அதன் உதவியுடன் நான் வலதுகால் வந்து கொண்டிருக்கும். அவ்வாறு