பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 175


கன்னலி என்பவர். அவரது சாதனை 207, 3 1/2. இந்தப் போட்டியில் நமது நாட்டின் சாதனை 1997 அங்குலமே. இப்பொழுது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிக்குரிய துரத்தைக் கூட கடக்க முடியவில்லையே?


6 7” உயரமுள்ள நமது வீரர் பிரவின் குமாரால் இந்த எல்லையைத் தாண்டி எறிய முடியவில்லை என் றால்? நல்ல உயரம், பலம் இருந்தும் ஏன் அடைய முடிய வில்லை என்றால், பயிற்சி இன்னும் போதவில்லை. இன் னும் நம் நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை என்றே பொருள்.இன்று உலக சாதனை 24771/2 அங்குல மாக ரஷ்ய வீரர் அனாடலி பாண்டர் சச் என்பவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எல்லையைக் கடக்க நமக்கு வலிமையும் துணிச்சலும் மட்டும் இருந்தால் போதாது. உழைப்பதற்குரிய மனத்தோடு, செயலில் தொடர்ந்து ஈடுபடும் குன்றாத செயல் வேண்டும். செய் வார்களா? என்றால், செய்தால்தானே நாமும் மானத் தோடு வாழ்கிறோம் என்று மற்ற நாட்டார்கள் உணர்வார் கள்!


இனி, பயிற்சி முறைகளைக் காண்போம்.


எறிவதற்குமுன், காற்றின் திசையைக் கண்காணித் துக் கொள்க.


இரும்புக் குண்டுக்கு எதிர் திசையில் இடுப்பின் அசைவு இருக்க, கைகள் முழு அளவு நீண்டிருக்க, முழங்கால் வளைந்திருக்க, சுற்றுகின்ற முறையை நன்கு பழக வேண்டும்; -


முதல்சுற்றைவிட, இரண்டாம் சுற்றிலே வேகம் இருக்க வேண்டும். மூன்றாவது சுற்றிலே, தன்னம்பிக்கை,