பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


உள்ளத்தாலும் சிறப்புற வளர்ந்த முழு மனிதனைக்கான, முழுமனிதர்கள் உள்ள சமுதாயத்தினைக் காண முயன் றார்கள். வெற்றியும் பெற்றார்கள். அந்த நோக்கத்தின் முனைப்பால், ஊக்கத்தின் உழைப்பால் தோன்றியதுதான் ஒலிம்பிக் பந்தயங்கள். ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற விதிகள் இருந்தனவா?


ஆமாம். இறைவன் பெயரில் அல்லது இறந்து போன ஒரு கிரேக்க மாவீரனின் இறுதிச் சடங்கின்போது, விழா விமரிசையாகக் கொண்டாடிய நாளிலே ஒலிம்பிக் பந்தயங்கள் தோன்றின என்றும் கூறுவர்.


இவ்வாறு வீரத்திற்கு முதலிடம் கொடுத்த விளையாட்டுப் போட்டிகளுக்கு விதிகள் இல்லாமலா இருக்கும்?


ஒலிம்பிக் பந்தயங்களில் கிரேக்கநாட்டுக்குடிமக்கள் மட்டுமே பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும் ஆண்கள் மட்டுமே, பெண்கள் பார்வையாளர்களாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. விருமபிப் பார்க்க வந்த பெண்களுக்குத் தண்டனை என்ன தெரியுமா? மரண தண்டனை தான்.


ஏன் பெண்கள் வந்து பார்க்கக் கூடாது என்று கேட்கலாம்! போட்டியில் கலந்து கொண்ட போட்டி யாளர்கள் எல்லாம் பிறந்த மேனியுடனே தான் ஓடினர், தாண்டினர், சண்டையிட்டனர். காரணம் தங்கள் உடல் அழகையும், ஆண்மையையும், பிறருக்கு மறைக்காமல் அப்படியே காட்டிப் பெருமைப் படவேண்டும் என்ற அவர்களது ஆசையேயன்றி வேறல்ல.