பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 179


4. எடை இழுத்து ஓடுதல் : (Power Run) பின்னால் ஒருவரை நிற்கச் செய்து ஒட இருப்பவரின் இடுப்பை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ள, அந்த நிலையில் நின்ற இடத்திலே அவரை இழுத்துக் கொண்டு ஒடுமாறு பழகுதல். 2. தாண்டும் நிகழ்ச்சிகளுக்கான பயிற்சி முறைகள் :


(a) நீளத் தாண்டலுக்கானவை


1. உட்கார்ந்து துள்ளித் தாண்டல் : (Squat Jump) முழங்கால் மடித்து ஒரிடத்தில் அமர்ந்து, உட்கார்ந்து பிறகு முன்புறமாகத் தாவிக் குதித்தல், மேலே தாவும் பொழுது கால்களை விறைப்பாக நீட்டி, பின்னர் கால்களை முன்புறமாக ஊன்ற வேண்டும்.


பயன் : துள்ளித் தாவுவதிலும், மணற்பரப்பில் குதிக்கும்பொழுது துள்ளி முன்புறமாக விழுவதிலும் சிறந்த வல்லமையை அளிக்கிறது.


2. olq sus55] 2 us 35mtoil_6\, : (Landing Jump) குதிக்கும் மணற்பரப்பிலிருந்து கொஞ்சதுரம் முன்பாக நின்று, பிறகு வேகமாக ஓடிவந்து, முடிந்தவரை உயரமாகச் சென்று, கால்களை விறைப்பாக வைத்து, முழங்கால்கள் முகத்திற்கு முன்னதாக வருவது போலச் செய்து, மணற் பரப்பில் கால் நீட்டிக் குதிக்க வேண்டும்.


பயன் : தாண்டிக் குதிக்கும் போது, அதிகத் துரம் கடந்து செல்கிற வல்லமையை இந்தப் பயிற்சி அளிக்கிறது. 3. காற்றில் நடப்பது போல் தாண்டுதல் : (Air Jump) ஓடிவந்து, உதைத்து எழும் பலகையில் காலை ஊன்றி உதைத்து மேலே எழும்பி, காற்றில் இருக்கும் சமயத்தில், மறுகாலை முன்புறமாக நீட்டியவாறு கொண்டு வந்து,