பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மேலே உயர்ந்து சென்று, பிறகு முன்னதாக நீட்டி வைத்திருந்த காலை தரையில் ஊன்றுகிறபோது, மற்ற காலையும் சேர்த்துக் கொண்டுமணலில் குதிக்க வேண்டும்.


பயன் : உச்சக்கட்ட உயரத்திற்குச் செல்வதும், அங்கேயே கால்களை மாற்றி மாற்றி வைத்து, நடப்பது போல முன்னேற முயற்சிக்கும் பழக்கமும் தெளிவாக ஏற்படுகிறது.இப்படி தண்ணிரில் குதித்தும் பழகலாம்.


4. சாய்தளப் பலகையிலிருந்து தாண்டல் : (Incline Board Jumps) இந்த சாய்தளப் பலகை மீது ஒடி வந்து காலூன்றும் போது, உயரமாக மேலெழும்பி செல்லுகிற உந்துதலை அளிக்கும்.


பயன் தரைக்கு மேலே சிறிது நேரம் இருக்கவும், அப்பொழுது கால்களையும் கைகளையும் மாறி மாறி இயக்கி, காற்றில் நடக்கும் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் இம்முறை பெரிதும் உதவுகிறது.


5. 560L 576&Tiq (53'5560 : (Jump over the Mark) தாண்டுகின்ற மணற்பரப்பில் ஒரு குச்சி அல்லது கயிற்றைப் பிடித்து வைத்திருக்க, தாண்டுகிறவர் ஓடிவந்து அந்தத் தடையைத் தாண்டி மறுபடியும் குதிக்க வேண்டும்.


பயன் தடைக்கு அப்பால் தாண்டிக் குதிக்கப் பழகுவதால், தாண்டும் தூரம் அதிகமாகிக் கொண்டே போகும். துள்ளித் தாவும் ஆற்றல் வளர்ச்சி அடைகிறது. தசைகளும் வலிமை பெறுகின்றன.


6. உயரம் தொட்டுத் தாண்டி விழுதல்: (Touch the top) தாண்டிக் குதிக்கும் மணற்பரப்பில் உயரமான அளவில் குச்சி அல்லது கயிற்றைக் கட்டி வைத்திருக்கவும். தாண்டுகிறவர் ஓடிவந்து, மணற்பரப்பில் குதிக்கும்