பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 181


முன்பாக, அந்த உயரக் கயிற்றைத் தொட்டுவிட்டுத் தான் குதிக்க வேண்டும்.பலமுறை தாண்டி தொட்டுப் பழகவும். பயன் : விரைவாக ஓடிவந்து உயரமாகத் தாண்டி


னால், அதிக தூரம் தாண்டிக் கடக்க முடியும் என்னும் உண்மையை விளக்கும் பயிற்சி முறையாகும்.


(b) உயரத் தாண்டலுக்குரிய பயிற்சிகள் :


1. காலால் உயரம் தொடுதல்:இடது கையை மேலே


உயர்த்தி, வலது காலால் தொட முயலுதல், அது போல


வலது கையை உயர்த்தி, இடது காலால் தொடுதல்.


2. சுவற்றில் உயரம் தொடுதல் : சுவற்றின் முன்னே நின்று கொண்டு, ஒரு காலை உயர்த்தி, சுவற்றின் எந்த அளவு உயரத்தைத் தொடமுடியுமோ, அந்த அளவினைத் தொடுதல். மேலும் மேலும் உயரமாகத் தொட முயற் சித்தல். (ஒரு கால் மாற்றி மறுகால்)


3. உயரத் தாண்டும் கம்பங்களுக்குரிய கம்பங்களின் இடையில் குறுக்குக் குச்சியை இடுப்பளவு உயரத்திற்கு வைத்து, அப்படியே செங்குத்தாக மேலே செல்வது போலத் தாண்டிப் பழகுதல்.


பயன்கள் : முதல் இரண்டு பயிற்சிகள் கால்களுக்கு வலிமையையும், கால்களின் நெகிழ்வுத் தன்மையை மிகுதிப்படுத்தி, அதிக உயரம் தாண்டவும் உதவுகின்றன. மூன்றாவது பயிற்சி செங்குத்தாக உயரம் தாண்டும் ஆற்றலை வளர்க்கிறது.


4. தோள் உயரத்திற்கு ஒரு பந்தை நூலால் கட்டித் தொங்க விட வேண்டும். தாண்டுபவர் ஒடி வந்து, செங்குத்தாக மேலே எழும்பி, பந்தை தனது ஒரு பாதத்தால் தொடவும். அல்லது முழங்காலால் தொடவும்.