பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 183


பயன்: கைத் தசைகள் வலிமை பெறுகின்றன. 3. உயர்த்தி எறிதல் : 7 அல்லது 8 அடி உயரத்தில் குறுக்குக் கம்பம் ஒன்றைக் கட்டி வைத்து, அதையே எறியும் தூரமாகக் கொள்ள வேண்டும். பிறகு, தொடை, இடுப்புப் பகுதியை வேகமாக இயக்கி,இரும்புக் குண்டை, குறுக்குக் கம்பத்திற்கு அப்பால் போய் விழுவது போல எறிய வேண்டும். நின்று எறியும் துரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர்த்தி நின்று, பலமுறை எறிந்து பழகவும்.


பயன்: வேகமாகவும் உயரமாகவும் குண்டை எறிவ தால், அதிக தூரம் எறிகின்ற ஆற்றல் நன்கு வளர்கிறது.


4. உந்தி எறிதல் இடது காலை தரையில் ஊன்றி பிறகு உந்தி எழுந்து, எறி வட்டத்தின் எல்லையைக் குறிக்கும் தடுப்புப் பலகை வரை சென்று எறிதல். அப்பொழுது தொடைப் பகுதி - இடுப்புப் பகுதிகளை நன்கு உயர்த்தி, விறைப்பாக நிமிர்த்தி எறிய வேண்டும்.


பயன் : எறியும் போது கால்களுக்கு உரிய விசைச் சக்தி முழுதும், எறியும் கைக்கு முழுமையாகக் கிடைக்கிறது. 5. உட்கார்ந்து எறிதல்: தரையில் நன்றாக உட்கார்ந்து (Full Squat)அதிக எடையுள்ள இரும்புக் குண்டை வைத்து, முன்னோக்கித் தள்ளி எறிதல். உடல் எடை முழுவதும் இடது காலுக்கு வருவதுபோல எறிந்து பழகவும்.


பயன் : கால்களின் சக்தியை எறியும் ஆற்றலுக்குப் பயன்படுத்த உதவும்.


2. தட்டெறிதல் 1.ஆட்காட்டி விரல் நுனியில் உள்ள முதல் மூட்டு(Joint) தட்டின் ஒரத்தை அழுத்திக் கொண்ட வாறு, தட்டினை முன்புறமாக உருட்டி விட்டுப் பழக