பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16. உணவும் பழக்கமும்


பேரன்புக்குரியவர்களே, உடலாண்மை நிகழ்ச்சி களைப் பற்றியும் அவைகளை முறையாகப் பயிலவேண்டிய வழிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். இவைகளிலே, ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர, அதாவது மும்முறைத் தாண்டல். இரும்புக்குண்டு வீசி எறிதல்; போன்றவற்றைத் தவிர எல்லா நிகழ்ச்சிகளிலும் பெண் களும் பங்கேற்றுப் பெருமையடைகிறார்கள்.


ஆகவே, ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய இம்முறைகளை, அனைவரும் பின்பற்றி வெற்றி பெறுங் கள். வீரவரலாற்றைப் படையுங்கள், பாரத நாட்டின் பெருமையை பார் போற்றச் செய்யுங்கள் என்று கூறி, உங்கள் கவனத்திற்கு சில முக்கியமான குறிப்புகளைக் கூறவிரும்புறேன்.


உணவு முறை :


எல்லா நிகழ்ச்சிகளிலும் ஏகோபித்த முறையில் உடல் வளமாக இருக்கவேண்டும் என்று கூறிக்கொண்டே வந்திருக்கிறோம்; உடல்வளம் என்பது செய்கின்ற பயிற்சிகளில் மட்டும் கிடைப்பதன்று. உண்ணுகின்ற உணவு முறைகளிலும் உன்னதமாய் கிடைக்கிறது என் பதையும் உணரவேண்டும்.