பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 17


போட்டிப் பந்தயங்களில் கலந்து கொள்வோர், கங்களது பெயருடன் முகவரியையும் எலிஸ்’ என்ற இ த்திற்குச் சென்று தரவேண்டும். அவர்களது பெயரை வைத்துக் கொண்டு, போட்டியாளர்களின் பரம்பரை, குணாதிசயம், உடல் திறமை, உடல் வன்மை முதலிய வற்றைத் தீர விசாரித்து, 10 பேர் கொண்ட குழு ஒன்று பரிசீலிக்கும்.


துய்மையான, கலப்பற்ற கிரேக்கர்களாகவும், ஒழுக்கமாக உள்ளவர்களுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள், ஒரு மாத கால கடுமையான உடலழகுப் பயிற்சிகள் செய்த பிறகே, பந்தயத்தில் கலந்துகொள்ள அனுமதி பெற்றனர். விதிகள் கடுமையானதாக இருந்ததோடு,


அக்கால விளையாட்டுக்களும் கடுமையானதாகவே


இருந்தன.


ஒலிம்பிக் பந்தயங்கள் அந்நாளில் எவ்வாறு நடந்தேறின?


அக்காலத்தில் ஒலிம்பிக் பந்தயங்கள் ஐந்து நாள் | ந்தன. போட்டி நாட்களில் கிரேக்க நாட்டு மக்கள்


அனைவருமே (பெண்களைத் தவிர) வந்து கூடி, கண்டு


களித்தனர். உழவர்கள், உழைப்பாளிகள், ஏவலர் முதல் ல்லாசபுரியில் வாழ்ந்த செல்வந்தர் அனைவரும் வருகை தந்தனர். அந்த விழாக் கோலத்தைக் கண்டு புலவர்கள் காவியம் பாடினர். ஒவியர்கள் ஒவியம் தீட்டி மகிழ்ந்தனர். -


கி.மு.452ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தய விழா வினைப் பற்றிய நிகழ்ச்சியினைக் கூறினால் ஒரளவு


ண்மை விளங்கும்.